உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி அவர்கள் உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் அதனை பின்பற்றி உறுதிமொழி எடுத்தனர். பின்னர் இணையதளம் வாயிலாகவும் மாணவர்கள் தங்கள் உறுதிமொழி எடுத்தனர்
