உடுமலை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா -முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு .

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தலைவராக செந்தில் முருகன் , மகளிர் அணி தலைவராக ஸ்ரீநிதி, செயலாளராக சுசித்ரா குருநாதன், செயலாளர் பொறுப்பு முருகேசன் அவர்களும் , பொருளாளராக திருஞானசம்பந்தம் மற்றும் உதவி செயலாளராக அரவிந்த்குமார் ஆகியோர் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் மதுரை மாவட்டம் முன்னாள் கவர்னர் ரகுவரன் கலந்துகொண்டு லையன்ஸ் கிளப் சங்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். லயன்ஸ் கிளப்புக்கு புதிய உறுப்பினர்களை லையன்ஸ் லோகநாதன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மூன்று சக்கர மிதிவண்டி , அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் ,மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ,லயன்ஸ் கிளப் திருமண மண்டபம் பகுதியில் செயல்படும் தையல் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்,
உடுமலை தாமரைச்செல்வன் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சர்க்கரை நோய் மையத்திற்கு 25 ஆயிரம் நன்கொடை ,மற்றும் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்காக லயன்ஸ் கிளப் சார்பில் நினைவுப் பரிசு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அவர்கள் வழங்கினர். உடன் லயன்ஸ் கிளப் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
