விடுதியில் சாப்பாடு கட்டணம் அதிகம் வசூலித்து தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக கூறி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வெளியூரில் இருந்து இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சுமார் 240 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில் அளிக்கப்படும் சாப்பாடு தரம் இல்லாததால் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கல்லூரி நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் விடுதியில் மாணவர்கள் 200 பேரும் மாணவிகள் 40பேரும் தங்கி படிக்கின்றனர். விடுதியில் சாப்பாட்டிற்காக சுமார் 2500 வசூல் செய்கின்றனர். அதற்கு எந்த ஒரு ரசிதும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மாணவாகள் தங்களுக்கு அளிக்கும் உணவுகள் தரம் இல்லாத உணவுகளையே தொடர்ந்து வழங்குகின்றனர்.

எங்கள் கல்லூரியில் வெளியே இருந்து வரும் ஆசிரியர்களும் எங்கள் விடுதியில் தான் வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். கல்லூரி வளாகத்துக்குள் அமைந்திருக்கும் மூன்று ஆண்டு பயிலும் பட்டப் படிப்புக்கான மாணவர்களும் எங்கள் விடுதியில் தான் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். அதற்கும் எங்கள் கணக்கில் தான் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு தரமான சாப்பாடு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
