BREAKING NEWS

1,000 அடிஉயர சாத்கர் மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் கல்லை உருட்டி விட்டு கும்பல் தப்பியோட்டம்.

1,000 அடிஉயர சாத்கர் மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் கல்லை உருட்டி விட்டு கும்பல் தப்பியோட்டம்.

பேரணாம்பட்டு அருகே உள்ள 1,000 அடி உயர சாக்தர் மலையில் கலெக்டர் குமாரரேல் பாண்டியன் திடீரென சாராய வேட்டை நடத்தினார். அப்போது சாராய கும்பல் மலையில் இருந்து கல்லை உருட்டிவிட்டு தப்பி சென்றது.

பேரணாம்பட்டு அருகே அமைந்துள்ள சாத்கர் மலைப்பகுதியில் உள்ள டங்கா, பால்சுனை, மாமரத்து ஓடை, அல்லேரி, பால் சுனை, கங்காச்சரம் பன்னீர் குட்டை ஆகிய இடங்களில் வற்றாத நீரோடைகள் உள்ளன. இந்த நீரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் காலை 8 மணியளவில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீரென சுமார் 1,000 அடி உயரமுள்ள செங்குத்தான மலைப்பகுதிக்கு 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

 

 

கலெக்டர் மலைப்பகுதிக்கு வருவது குறித்து உள்ளூர் வருவாய் துறையினர்க்கு தகவல் ஏதும் தெரியவில்லை. சப்- கலெக்டர் தனஞ்செயன் மலைப் பகுதிக்கு சென்ற பின்னர் தான் வருவாய் துறையினர், பேரணாம்பட்டு போலீசார், வனத்துறையினர் அவசர அவசரமாக மலைப்பகுதிக்கு சென்றனர்.

சாத்கர் மலைப்பகுதியில் உள்ள கங்காச்சரம் என்ற இடத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை பார்த்த 4 பேர் கொண்ட சாராய கும்பல் மலையிலிருந்த கல்லை உருட்டி விட்டு மற்ற சாராய கும்பல்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டு மலைப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். இதனையறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அங்கிருந்த பேரணாம்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத்தை அழைத்து கல்லை உருட்டி விட்டு தப்பியோடிய சாராய கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார்.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சாராய வேட்டையில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் மூலப்பொருட்களான 5 மூட்டைகள் வெல்லம், பட்டைகள், 4 பேரல் ஊறல்கள் மற்றும் அடுப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தார். பின்னர் பேரணாம்பட்டு ஒன்றியம் பத்தல பல்லி உளராட்சியில் கட்டப்பட்டு வரும் நரிக்குறவர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடியாத்தம் சப்-கலெக்டர் தனஞ்செயன், பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் மது விலக்கு போலீசார், வருவாய்த் துறை, வனத்துறையினர், தீயணைப்பு வீரர்களும் சென்றிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )