தேனில் உள்ள பங்களா மேட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலும் தேனி மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்து அத்தியாவசிய பொருட்களின் விலையை ரத்து செய்யக் கோரியும்,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் படுத்தும் நிகழ்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட தொழிற்சங்க தலைவர் காசி மாயன் வரவேற்பு உறை நிகழ்த்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அன்பு நன்றி உரையாற்றினார்.
CATEGORIES தேனி
