தரங்கம்பாடி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா .

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பொறையார், எருக்கட்டாஞ்சேரி, சாத்துக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 110 பயனாளிகளுக்கு தலா வீடு ஒன்று 2.10 லட்சம் செலவில் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி பேசினார்.
இதில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், செயல் அலுவலர் கமலக்கண்ணன், துப்புரவு ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
