`கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்’- எம்பியாக தமிழில் பதவியேற்ற இளையராஜா உறுதிமொழி.

மாநிலங்களவை உறுப்பினரான இசைஞானி இளையராஜா இன்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாவில் விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நியமன எம்பிக்களாக அமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 18-ம் தேதி எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
