BREAKING NEWS

பாலியல் தொல்லை போன்றவைகள் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.

பாலியல் தொல்லை போன்றவைகள் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.

தஞ்சை: பாலியல் தொல்லை போன்றவைகள் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவில் நடப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.

 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு நிதி அளிப்பு கோரிக்கை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குருவை சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது வருகிற 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்வதற்கான காலம் முடிகிறது ஆனால் காப்பீட்டு நிறுவனங்களை இதுவரை தமிழக அரசு தேர்வு செய்யவில்லை.

 

 

இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் தமிழக அரசே காப்பீடு செய்ய முன்வர வேண்டும் நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மையம் செய்யக்கூடாது மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்திய அவர் பாலியல் தொல்லை மாணவிகள் மர்ம மரணம் தற்கொலை போன்றவை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிக அளவில் நடக்கிறது.

 

கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் அனுமதி இன்றி விடுதி நடத்தியது தற்போது தெரியவந்துள்ளது பள்ளிகளை தனியார் நடத்தலாம் என அரசு விட்டதே தவறான கொள்கை முடிவு ஆகும் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )