கோவை ரயில் பாதையில் எஞ்சின் பணி வரும் 18 வரை ரயில் இயக்கம் மாற்றம்.

கோவை – போத்தனுார் இடையேயான ரயில்பாதையில், இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளன. இதையடுத்து, இப்பாதை வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சொரனுார் – கோவை இடையே(வண்டி எண்:06458) தினசரி இயக்கப்படும் ரயில், வரும், 12 முதல், அக்., 18ம் தேதி வரை, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வரையில் இயக்கப்படும். இதேபோல், கோவை – சொரனுார் இடையே(வண்டி எண்:06459) தினசரி இயக்கப்படும் ரயில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மாலை, 4:41 மணிக்கு புறப்படும்.பிலாஸ்பூர் – எர்ணாகுளம்(வண்டி எண்:22815), திருநெல்வேலி – தாதர்(வண்டி எண்:22630), பிலாஸ்பூர் –
திருநெல்வேலி(வண்டி எண்:22619), பாட்னா – எர்ணாகுளம்(வண்டி எண்:22670), செக்கந்திராபாத் – எர்ணாகுளம்(வண்டி எண்:07189) ஆகிய வாராந்திர ரயில்கள், இருகூரில் இருந்து போத்தனுார் வழியாக இயக்கப்படும்.
கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது. அதனால், இந்த ரயில்கள் போத்தனுாரில் நின்று செல்லும்.
