இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பாதுகாப்பு இருக்க வேண்டுமானால் தமிழரை சுட்டுக்கொன்றவர்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்.

திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி.
திண்டுக்கல்லில் கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது .
இதில் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகுக்க, மாவட்ட செயலாளர் சாதிக் ராஜா முன்னிலை வகித்தார் ,மாவட்ட பொருளாளர் சதாசிவம் வரவேற்புரை ஆற்றினார். இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு கூறியதாவது.
தமிழக அரசு அந்நிய செலவாணிகளை ஈர்ப்பதிலும் புதிய தொழிற்சாலைகளை துவங்குவதிலும் தான் முனைப்பு காட்டி வருகிறது.
இதன் காரணமாக கடந்த அதிமுகவில் பத்து ஆண்டுகள் ஆட்சியில் முடங்கி கிடந்த கட்டுமான தொழில் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் வேகம் எடுக்க துவங்கியுள்ளது .இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, மணல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்ய நிரந்தரமான குழு அமைக்க வேண்டும்.
அதில் உற்பத்தியாளர் பிரதிநிதிகள் அரசு பிரதிநிதிகள் உபயோகிப்பவர்கள் பிரதிநிதிகள் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரை கொண்ட குழு அமைக்க வேண்டும்.
இந்த குழு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடி கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கட்டுமான தொழிலில் 18 %சதவீதத்தில் இருந்து 25% சதவீதமாக ஜிஎஸ்டி வரியை உயர்த்தி இருக்கிறது. இதனை முழுமையாக திரும்ப பெற வேண்டும். இந்தத் துறைக்கு ஜிஎஸ்டியே இருக்கக் கூடாது .
ஜிஎஸ்டி இவற்றினால் கட்டுமான தொழில் முடங்கும் அபாயம் உள்ளது. விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறை மிக முக்கியமானதாகும்.
எனவே மத்தியில் மாநிலத்திலும் இதற்காக தனி அமைச்சர் அமைக்கப்பட வேண்டும் மத்திய அரசு கார்பரேட் நிறுவனம் முதலாளிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டினை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆட்சியில் ஆறுகளில் இயந்திரங்களை வைத்து 20 முதல் 30 அடி வரை மணல் கொள்ளை நடந்தது .இதன் காரணமாக உயர் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது தமிழக அரசு கனிமவளத் துறை உத்தரவுப்படி எத்தனை மீட்டர் எடுக்க வேண்டுமோ அந்த அளவிற்கு மண்ணெடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும் இதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் .
அதன் உச்சகட்டமாக குவைத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தர வேண்டும் அப்போதுதான் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என தெரிவித்தார்.
இதில் செய்தி தொடர்பாளர் மணிமாறன், ஆலோசகர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
