பழனியில் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
தொடர்ந்து பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள பள்ளிகளில் படிக்கும் பிள்ளைமார் சமுதாயத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கந்தவிலாஸ் பாஸ்கரன், லயன் அசோக், செல்லப்பாண்டி, நாகு ஜி, ,கார்த்தி ,ஆறுமுகம்,மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இவ்விழாவில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும்வண்ணம், விழிப்புணர்வாக மஞ்சள் பை வழங்கப்பட்டது.
CATEGORIES திண்டுக்கல்
