BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததால் நான்கு இடங்களில் உடைப்பு. மழைநீரால் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள். 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நேரடி விதைப்பு முற்றிலும் நாசம் என விவசாயிகள் வேதனை.

 

 

நேரடி விதைப்பு செய்யப்பட்டு 20 நாட்களை ஆன நிலை தஞ்சையில் பெய்த கன மழை காரணமாக 300 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள பொன்னேரி வடிகால் வாய்க்கால் தூர்வாரி மூன்று வருடம் ஆகிறது.

 

இதனால் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால் வாய்கால் முழுவதும் புதர் மண்டி உள்ளது. இதனால் மழை நீர் வடியாததால், நான்கு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும் இந்த தண்ணீர் வடிய இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும், தொடர்ந்து மழை பெய்தால் வடிய வாய்ப்பில்லை என கூறும் விவசாயிகள், இந்த தண்ணீர் வடியும்போது விதைகள் அனைத்தும் அழுகிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

 

 

ஏற்கனவே இரண்டு முறை மழையில் பாதிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக விதைப்பு செய்துள்ளதாகவும், இதுவரை சுமார் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். பலமுறை அதிகாரிகளிடம்புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

 

 

எனவே பொன்னேரி வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )