BREAKING NEWS

தூத்துக்குடி சிவன் கோவில், மற்றும் பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி சிவன் கோவில், மற்றும் பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.

 

தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.

 

 

காலை 11.00 மணியளவில் வந்த அவர் சிவன் கோவிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்தார். பின்னர், பாகம்பிரியாள் சன்னதியில் வழிபட்டுவிட்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டார். 

 

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அவருடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உடன் வந்தார்.

 

 

தமிழக முதல்வரின் மகள் செந்தாமரை வருகையையொட்டி தனிப்பிரிவு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )