மதுரவல்லி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மதுரவல்லி ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி(கி.ஊ), சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் ஆனந்தி வரவு செலவு கணக்குகளையும், ஊராட்சி நலனுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காண்பித்தார்.
பின்னர் பொதுமக்களும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் சிலவற்றை கிராம சபையில் முன் வைத்தனர்.

துணைத் தலைவர் ராஜ்மோகன், வார்டு உறுப்பினர்கள் ரங்கநாதன், மணிகண்டன், விமலா, கொளஞ்சி, சத்யா ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
CATEGORIES கடலூர்
TAGS அரசியல்கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நல்லூர் ஒன்றியம்மதுரவல்லி ஊராட்சி கிராம சபை கூட்டம்
