BREAKING NEWS

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!

போடி செய்தியாளர் மு.பிரதீப்.

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போடி நகர், ஒன்றிய குழுக்கள் சார்பில் இன்று நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா நடைபெற்றது.

 

கட் அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் K.பெருமாள் கொடியேற்றினார் அதன் பின் தெருமுனை கூட்டம் நகர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு நகரச்செயலாளர் தோழர் K.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது முன்னிலை தோழர்கள் P.முருகேசன் A.S.கணேசன் A.விரராஜ் வகித்தனர் நவம்பர் புரட்சி தினத்தின் சிறப்புகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் N.ரவிமுருகன் சிறப்புரையாற்றினார்.

 

நிகழ்வில் தோழர்கள் ஒன்றிய துணை செயலாளர் தோழர் K.முத்துமுருகன் நகர பொருளாளர் தோழர் V.கோவிந்தராஜ், A.அப்துல்ரஹீம், S.சபரிநாதன்,டெம்போ S.ராஜா,K.P.பெத்தனராஜ் தோழர் J.ஜவஹர் லெனின் கென்னடி நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )