உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மக்கள் நலனுக்காக விரோதமாக உயர்த்தப்பட்ட சமையல் கேஸ் விலை தேச பொருளாதார சீர்குலைத்த அதானி ககுடும்பத்தால் பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்பட்ட நிதி இழப்பு பள்ளபாளையம் இந்திரா காலனியில் உள்ள தொகுப்பு வீடுகளை உடனடியாக பராமரிப்பு செய்திடவும்,
சமுதாய நல கூட கட்டிடங்கள்பணிகளை விரைந்து முடித்திடவும் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகைகளை உயர்த்தி வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம்உடுமலைப்பேட்டைஉடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம்கண்டன ஆர்ப்பாட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்