BREAKING NEWS

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (01/04/2023) நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து,

 

தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசித்தார் . தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,

 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS