உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் மடுஜெபமாலைமாதா ஆலயத்தில் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் அவர்கள் தலைமையில் புனித வெள்ளி திருப்பலி நடபெற்றது.
தொடர்ந்து மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் இயேசுவின் பாதத்தில் முத்தி செய்யும் நிகழ்வு நடைபெற்றது அதனை தொடர்ந்து நகாின் முக்கிய வீதிகளில் சிலுவைப்பாதை நிகழ்வை தத்ரூபமாக நடித்து நடத்தினார்கள் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.
அது போல் தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் தாளமுத்துநகர் உதவி பங்கு தந்தை அருட்திரு வின்சென்ட் அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
அந்தோணியார் ஆலயத்தில் இயேசுவின் பாதம் முத்தி செய்யும் நிகழ்வு நடைபெற்றது தொடா்ந்து முக்கிய வீதிகளின் வழியாக சிலுவைப்பாதை நடைபெற்றது திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
அது போன்று தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் மங்களகிாி மர்சி தியான இல்லத்தின் இயக்குனா் அருட்திரு மகிழன் அவா்கள் தலைமையில் புனித வெள்ளி திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து ஆரோக்கியநாதர் ஆலயத்தில் இயேசுவின் பாதத்தில் முத்தி செய்யும் நிகழ்வும் முக்கிய வீதிகளின் வழியாக சிலுவைப்பாதை நடைபெற்றது திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.