அதிமுக கட்சியின் சின்னத்தையும், கொடியையும் வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காமராஜ். மே மாதம் 4ம் தேதி ஒரத்தநாட்டில் எடப்பாடியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இக்கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய்வர்கள் இணைய உள்ளனர் என்றார்.

கட்சி கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்துவோம் என ஒ.பி.எஸ் தெரிவிப்பது நியாயத்திற்கும், சட்டத்திற்கும் புறம்பானது என்றார்.அதிமுக கட்சியின் சின்னத்தையும், கொடியையும் வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என காமராஜ் தெரிவித்தார்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அரசியல்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்முன்னாள் அமைச்சர் காமராஜ்
