BREAKING NEWS

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து சென்னை  வடபழனி பகுதிக்கு துக்கம் அனுசரிப்பதற்காக ஒரு வேனில் 14 பேர் சென்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சின்க்குப்பம்  கிராம எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி டு சென்னை மார்க்கமாக வேன் சென்றுகொண்டிருந்தது.

அப்போது பேன் டயர் வெடித்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் குமரேசன் வயது 30 என்பவர் உட்பட வேனில் பயனம் செய்த 14 ம் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ்சில் உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக திருநாவலூர் போலீசார் வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தினால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு.

CATEGORIES
TAGS