BREAKING NEWS

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ்  இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார்.

இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவரிடம் பேசினார்.

இதையடுத்து அன்புச் செல்வனிடம் இருந்து காரை ஒன்பது லட்சத்தி பத்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்க பேசி முடிக்கப்பட்டது. காரை வாங்குவதற்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானிக்கு வரும்படி கூறியதையடுத்து மதன்ராஜ் அங்கு சென்றார்.

அங்கு அன்புச்செல்வனை தொடர்பு கொண்டபோது தான் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் வந்து விட்டதாகவும் அங்குள்ள தனது நண்பர்கள் ஆனந்த் மற்றும் முருகன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறும் அன்புச்செல்வன் கூறினார்.

இதையடுத்து அவர்களிடம் பணத்தை கொடுத்த மதன்ராஜ் காரை எடுத்துச் சென்றார். சில நாட்கள் கழித்து கார் புரோக்கரான மதன்ராஜ் அதே காரை 9 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மறுவிற்பனை செய்தார்.

இதையடுத்து சிலநாட்களில் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டுபிடித்து கேரள மாநிலத்தில் இருந்து வந்த போலீசார் இந்த கார் திருடப்பட்ட கார் என்று கூறி அதை விக்னேஸ்சிடம் இருந்து எடுத்துச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் தான் கார்வாங்கிய மதன்ராஜை தொடர்பு கொண்டு விபரத்தை கூறி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

இதைக் கேட்ட மதன்ராஜ் கடும் அதிர்ச்சி அடைந்து தான் கார் வாங்கிய அன்புச்செல்வனை தொடர்பு கொண்ட முயன்றும் முடியாதால் ராஜதாணியில் கார் வாங்குவதற்கு பணம் கொடுத்த முருகன் மற்றும் ஆனந்தை தொடர்பு கொள்ளவும் முயன்றார்.

பலமுறை முயன்றும் இவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மதன்ராஜ் புகார் செய்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை குழுவினரும் தீவிரமாக தேடியதில் காரை விற்பனை செய்த அன்புச்செல்வன் அவருக்கு உதவிய முருகன் ஆனந்தன் மாரிமுத்து முத்துப்பாண்டி வேல்முருகன் ஆகிய ஆறு பேர்கள் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

இவர்களை தீவிர விசாரணை செய்து ஆவணங்களை சேகரித்த ஆண்டிப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மதுரை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இத்திருட்டு சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு கூறுகையில்,

இணையதள விளம்பரத்தை பார்த்து மதன்ராஜ் அன்புச்செல்வனை தொடர்பு கொண்டு கார் வாங்கி விக்னேஸ் சிற்கு விற்பனை செய்த நிலையில் அந்தக் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் கேரள போலீசார் காரை கண்டுபிடித்து வந்து அதை திருட்டு கார் என்று கூறி அதை மீட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து மதன்ராஜ் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து அன்புச்செல்வன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் ஆறு பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்திருட்டு சம்பவத்தில் காரின் என்ஜின் நம்பர் சேஸ் நம்பர் மற்றும் ஆர்சி புக் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களில் போலியாக அரசன் முத்திரை ரப்பர் ஸ்டாம்புகள் தயார் செய்யப்பட்டு உள்ளன ஆவணங்களில் போலி கையெழுத்துக்கள் போடப்பட்டுள்ளன.

கார் டிராக்டர் ஜேசிபி வாகனம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டு இதுபோன்று போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே பொதுமக்கள் இணையதளம் விளம்பரங்களை பார்த்து வாகனங்களை வாங்குவதற்கு முன்பு ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று அரசு அலுவலகங்களில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் ஏமாறக்கூடாது என்றும்,

தொடர் விசாரணையில் மேலும் திருட்டு கும்பலிடமிருந்து பல உண்மைகள் வெளிவரும் என்றார்.

CATEGORIES
TAGS