BREAKING NEWS

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும். நிவாரணத் தொகையான ஒன்றிய அரசின் ரூபாய் 15 லட்சத்துடன் கூடுதலாக 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டில் இடம் பெயர்ந்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிலம், வீட்டு வசதி குடிநீர் மின்சாரம் சாலை,ரேஷன்,பள்ளி மற்றும் சாகுபடி நிலம் ஆகியவை அடங்கியதாக இருக்க வேண்டும்.
17 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ல் வழங்கி உள்ள பாரம்பரிய உரிமைகள் அனைத்தையும் பழங்குடி மக்கள் மற்றும் வனம் சார்ந்த வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் வன உரிமை கிராம சபைகள் அமைத்திட வேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி மக்களின் காத்திருப்பு போராட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி போஸ்பாரா – வில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும். நிவாரணத் தொகையான ஒன்றிய அரசின் ரூபாய் 15 லட்சத்துடன் கூடுதலாக 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டில் இடம் பெயர்ந்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிலம், வீட்டு வசதி குடிநீர் மின்சாரம் சாலை,ரேஷன்,பள்ளி மற்றும் சாகுபடி நிலம் ஆகியவை அடங்கியதாக இருக்க வேண்டும்.
17 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ல் வழங்கி உள்ள பாரம்பரிய உரிமைகள் அனைத்தையும் பழங்குடி மக்கள் மற்றும் வனம் சார்ந்த வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் வன உரிமை கிராம சபைகள் அமைத்திட வேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி மக்களின் காத்திருப்பு போராட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி போஸ்பாரா – வில் நடைபெற்றது.

Share this…

CATEGORIES
TAGS