BREAKING NEWS

உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஊரீஸ் கல்லூரியில், ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஊரீஸ் கல்லூரியில், ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபீசர்ஸ் லைன், உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஊரீஸ் கல்லூரி கூட்டரங்கில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊரீஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். அன்னி கமலா ஃப்ளோரினா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி. திருமாறன் வரவேற்புரை வழங்கி சிறப்பித்தனர்.

இதில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்டக் கிளைத் தலைவர் டி.எஸ். உதயசங்கர் மற்றும் ஊரீஸ் கல்லூரி பொருளாளர் டாக்டர் எஸ். காலேப் நோபிள் சந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றி சிறப்பித்தனர்.

இதில் இந்தியன் ரெட் கிராஸ் எம் சி உறுப்பினர்கள் இன்டர்நாத், வேல்முருகன், லைப் மெம்பர் சந்துரு, மேனேஜர் தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். மேலும், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் அவசர சிகிச்சை செவிலியர் பிரிவுத் தலைவர் பேராசிரியர் டி. சாமுவேல் ரவி மற்றும் ஆர்டிடி தலைமைப் பயிற்சியாளர் முருகேசன் ஆகியோர் பேரிடர் மேலாண்மை குறித்த பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை வழங்கினர். இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்டக் கிளைப் பொருளாளர் கே. பாண்டியன் தொகுத்து வழங்கி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சங்கக் குழுவினர் சார்பில் மரியாதை செய்யப்படுகிறது. இதில் ஊரிஸ் கல்லூரி மாணவர்கள், ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் அலுவலர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டக் கிளைச் செயலாளர் வி.எஸ். பர்வதா நன்றியுரை வழங்கினர். இறுதியாக, தேசிய கீதத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

CATEGORIES
TAGS