BREAKING NEWS

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இமெயிலில் மனு அனுப்பிய நலிவுற்ற குடும்பத்தினருக்கு பசுமை வீட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இமெயிலில் மனு அனுப்பிய நலிவுற்ற குடும்பத்தினருக்கு பசுமை வீட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சின்ன பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

 

மகள்களுக்கு திருமணமான நிலையில் தனது சொந்த ஊரில் இருக்க இடமும் இல்லாமல் வீடும் இல்லாமல் சுரேஷ் சதிஷ் ஆகிய இரு மகன்களுடன் சிரமத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் சதீஷ் (19) கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார் இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் ஈமெயிலுக்கு தங்களது நிலையை மனுவாக அளித்து உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

 

 

இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர திட்டமிட்டு முதலில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கி பின்னர் தமிழக அரசு நிதி உதவி மற்றும் தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் பங்களிப்புடன் ரூ 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அவர்களுக்கு புதிதாக பசுமை வீடு கட்டப்பட்டது.

 

 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த வீட்டினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறும்போது அவர்கள் அனுப்பிய மனுவில் தங்களது நிலையை விளக்கி தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து,

 

மேலும் தங்களுக்கு உதவி கிடைத்தால் நாங்கள் நல்ல நிலையை அடைந்ததும் இதேபோல் அடுத்தவர்களுக்கு நாங்களும் உதவி செய்வோம் என்று கூறியிருந்தனர் அதைப் போல் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

 இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )