பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் நகரத் செயலாளர் ப.சீ. நாகராசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரின் திரு உருவப் படத்திற்கு நகரச் செயலாளர் நாகராசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகர அவைத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி நல்லசிவம், திமுக நகர்மன்ற உறுப்பினர்களான சுப்பிரமணியம், சந்தோஷ்குமார், விஜய் ஆனந்த், பாரதிராஜா, கவிதா, ரஷ்யாபேகம், உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
