BREAKING NEWS

மயிலாடுதுறையில், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறையில், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கங்காதரபுரம் ஊராட்சி நிம்மேலி கிராமத்தில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி,ஸ்ரீ ஐயனார், ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள கோவில் அமைந்துள்ளது.

 

இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வியாழன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள் கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் வியாழன்கிழமை காலை முடிவடைந்ததை அடுத்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

 

தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர். அதனை அடுத்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிசே கத்தை சொர்ணபுரம் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் சோமாஸ்கந்த சிவாச்சாரியார், ராமமூர்த்தி சிவாச்சாரியார், கணேச சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்து வைத்தனர்.

 

 

 இந்த கும்பாபிஷேகத்தில் ஆலய கைங்கர்ய முன்னிலை யாளர்கள் நிம்மேலி ஒரு பங்கு வகையறாவினர் ஏ.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா பாஸ்கரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )