BREAKING NEWS

திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவப்பிரகாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவப்பிரகாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் ஆதீன்குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு அருளுபதேசம் செய்த ஸ்ரீ சித்த சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் வடக்கு முகப்பில் ஒரு சிறு கோயில் கட்டி அதில் விநாயக பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.

 

அந்த கோயில் அவரின் பெயரில் சிவப்பிரகாச விநாயகர் என்றழைக்கப்பட்டது.

 

இந்த கோயில் கடந்த 1989 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதுபோல் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் சன்னதி க்கும், ஸ்ரீ திருமாளிகை தேவர் சன்னதிக்கும் ஸ்ரீ நடராஜர் சன்னதி இது சின்னபூஜை மடம் என்றழைக்கப்படுகிறது.

 

இது தற்போது புனரமைப்பு செய்து திருப்பணிகள் நடைபெற்றது.
தற்போது சின்னபூஜைமடம், சிவப்பிரகாச விநாயகர்
கோயிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழன் கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

 

 

 

தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் வெள்ளி கிழமை காலை முடிவடைந்ததை அடுத்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர்.

 

அதனை அடுத்து ஸ்ரீ சிவப்பிரகாச விநாயகர் கோயில்
விமான கலசத்திற்கு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

 

சின்ன பூஜைமடை ஸ்ரீ நடராஜர் சன்னதிக்கு கோவில் விமான கலசத்திற்கு ஆதீன கட்டளை வேலப்பதம்பிரான் சுவாமிகள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

 

இந்த கும்பாபிஷேகத்தில் ஆதீன மேலாளர்
திருமாறன், கண்காணிப்பாளர்கள் சண்முகம், குருமூர்த்தி, காசாளர் சுந்தரேசன், ஆதீன பள்ளி ஆசிரியர்கள், ஆதீன கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )