வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டிலிருந்து துரத்திவிட்டு 2ம் திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .
திருமணத்தின் போது குமார் செந்தாமரையிடம் ஏராளமாக வரதட்சணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தாமரையிடம் வரதட்சணை கேட்டு குமார் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் வரதட்சணை பெற்று வராததால் செந்தாமரையை வீட்டை குமாரும் அவரது குடும்பத்தினரும் துரத்தி விட்டுள்ளனர். இதையடுத்து தன் மனைவிக்கு தெரியாமல் குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனை அறிந்த செந்தாமரை கணவர் குமாரிடம் இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது குமார், அவருடைய தாயார், சகோதரி, குமாரின் இரண்டாவது மனைவியின் தாய், தந்தை ஆகிய ஐந்து பேரும் செந்தாமரை மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் செந்தாமரை புகார் செய்தார். இதன்பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
