BREAKING NEWS

தஞ்சை அருகே காதலிக்க வற்புறுத்தி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மற்றும் அவரது தாயை வாலிபரை வல்லம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சை அருகே காதலிக்க வற்புறுத்தி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மற்றும் அவரது தாயை வாலிபரை வல்லம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தஞ்சை அருகே பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (21). இவர் அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக தெரிவித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மாணவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தன்னை காதலிக்க கூறி சுதாகர் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி தன் தாயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாய் சுதாகரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுதாகரின் தாய் கலையரசி, மாணவியின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டி, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையல் சம்பவதன்று அந்த மாணவியும் அவரது தாயாரும் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து சுதாகர் மாணவியை காதலிப்பதாக கூறி மிரட்டி உள்ளார்.

மேலும் சுதாகர், மாணவியின் கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற மாணவியின் தாயையும் சுதாகர் தாக்கி உள்ளார். இதில் சிறுமி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .

இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுதாகர் (21) மற்றும் சுதாகரின் தாய் கலையரசி (45) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )