BREAKING NEWS

வேலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நேரக் காப்பாளர்! 

வேலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நேரக் காப்பாளர்! 

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார் நேரக்காப்பாளர் லோகநாதன். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பேருந்து நடத்துநர்களிடம் 10 ரூபாய், 20 ரூபாய் பெற்றுக் கொண்டு அரசு பேருந்தில் ஏறும் பயணிகளை தனியார் பேருந்துகளில் மாற்றி ஏற்றி விடுவதாக சில பயணிகள் புகார் கூறி வருகின்றனர். இதனால் அரசுக்கு பெருத்த அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது போல் செயல்படும் நேரக்காப்பாளர் லோகநாதன் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இவரை இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பஸ் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக உள்ளது.

வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தனது இருக்கையை விட்டு வெளியே வராமல் அமைதி காப்பதால் இது போன்ற குளறுபடிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த வண்ணம் உள்ளது. வேலூரில் புரையோடி உள்ள இதுபோன்ற புரோக்கர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது?. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை இது போன்ற கயவர்களிடமிருந்து மீட்பது எப்போது? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this…

CATEGORIES
TAGS