BREAKING NEWS

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி! 

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வேறு பணியிடங்கள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். இப்படி விண்ணப்பம் செய்த அவர்களை வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிந்த நிலையில் இதுநாள் வரை அதற்கான உத்தரவுகள் வழங்கப்படாமல் கிடப்பிலே உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்படும் இடங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்குதான் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவு வழங்கப்படும். ஆனால் காட்பாடி வட்டத்தில் ஓராண்டு, 6 மாதங்கள், 2 ஆண்டுகள் என்று குறுகிய காலத்தில் பணி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் வேண்டி கிராம நிர்வாக அலுவலர்கள் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் மனு செய்துவிட்டு காத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக நேர்காணல் முடிந்தும் மாற்றுப் பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அதுதான் உண்மை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடி வட்டத்தில் தாராபடவேடு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, காங்கேயநல்லூர் ஆகிய இடங்களுக்கு கடுமையான போட்டி கிராம நிர்வாக அலுவலர்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சாரரே திரும்பத் திரும்ப தாராபடவேடு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, காங்கேயநல்லூர் ஆகிய இடங்களில் மீண்டும் மீண்டும் அதாவது நான்கு முறை, மூன்று முறை என்று பணியாற்றுகின்றனரே தவிர புதிய நபர்கள் யாரையும் அங்கு பணியாற்ற விடுவதில்லை என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. ஆக மொத்தத்தில் இந்த மேற்கண்ட பகுதிகளில் பணியாற்றிய நபர்களை மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் சங்கங்களும் தங்களது தலையீட்டை பயன்படுத்தி பணியிட மாற்றம் பெற்று விட துடியாய் துடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் இந்த பணியிட மாற்றம் வழங்குவதில் யார் ?யார்? இதற்கு முன்னர் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் பணியாற்றி விட்டு மீண்டும் அதே இடத்தை குறி வைத்து தனக்கு பணி வழங்க கேட்கின்றனர் என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். நியாயமான பணியிட மாற்றம் வழங்க வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் விமர்சனம் செய்யும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியராக வந்துள்ள லீலா அலெக்ஸ் மேற்பார்வையிட்டு இதில் வேறு எவ்வித குளறுபடிகளும், பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்று சில கிராம நிர்வாக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .ஆக மொத்தத்தில் மாவட்ட நிர்வாகம் காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து நியமிப்பதில் முறையான நடவடிக்கையை எடுக்கிறதா? அல்லது வழக்கம் போல் முறைகேடான பணிகளை தொடர்ந்து செய்யுமா ?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS