BREAKING NEWS

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், கட்டிட வரி உயர்வு, தொழில் உரிமம் கட்டணம் உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சங்கரன்கோவில் நகரில் மத்திய பகுதியில் செயல்பட்டு வந்த அண்ணா பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்ட 2022 ஆகஸ்ட் மாதம் வேலை தொடங்கப்பட்டு இன்னும் திறக்க படாததால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனவும், நகராட்சி மூலம் கட்டப்பட்ட

லெமன் மார்கெட் மற்றும் தினசரி காய்கனி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,

மேலும் தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை மற்றும் வைப்புத் தொகையை குறைத்து அனைத்து வியாபாரிகளும் பயனடையும் படி செய்ய வேண்டும் எனவும்,மேலும் தொழில் வரி மற்றும் டிரேடர்ஸ் லைசன்ஸ் அதிகமாக உள்ளது ரூ.700 முதல் 52, 500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனை குறைக்க வேண்டும் எனவும்,கட்டிட தீர்வை வருடத்திற்கு 6 சதவிகிதம் என்று அறிவித்துள்ளதை குறைத்து அதனை 2 சதவிகிதம் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 6 சதவிகிதம் என்று மாற்ற வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நகர வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு செய்து அறவழியில் போராடுவோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின்போது நகர வர்த்தக சங்கத் தலைவர் முத்தையா, செயலாளர் குருநாதன், பொருளாளர் கண்ணன் சிஎஸ்எம்எஸ் சங்கர சுப்ரமணியன், அனுசுயா மாரிமுத்து, சங்கரன் இணைச் செயலாளர் சின்னசாமி செயற்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ் சண்முகம், ராமர், காசி மணி, செல்வம், துணை தலைவர் ஏ. கே கணேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS