BREAKING NEWS

நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேராமலும், இடைநின்றும் இருந்து வந்தனர். இதனை கண்டறிந்த பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ராமலிங்கம், அப்பாஸ் மற்றும் நெடுங்குணம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துக் கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நரிக்குறவர் இன குழந்தைகள் 14 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு வழங்கிய இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்கி நாள்தோறும் தவறாமல் பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியர்கள் நடந்தும் பாடங்களை நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும் மாணவர்களை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து சென்று வர ஆட்டோ வசதியும் செய்யப்பட்டுள்ளதாக வட்டார கல்வி அலுவலர் அப்போது கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ், ஆசிரியைகள் சரஸ்வதி, அலமேலு, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS