பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் 2வது புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்ரீராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2வது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் ஸ்ரீசத்தியநாராயண பூஜை வெகு விமரிசையாக நடந்தது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் செய்திருந்தார். இந்த ஸ்ரீசத்திய நாராயண பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சுண்டல் மற்றும் புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரசாதத்தை பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
TAGS காட்பாடிசனிக்கிழமைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்புரட்டாசி மாதம்வேலூர்வேலூர் மாவட்டம்ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்
