BREAKING NEWS

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறை மாயூரநாதர்  திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றம். திரளான பக்தர்கள் பங்கேற்பு. இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து மயிலுரு நீங்கி சிவனுடன் மயூர தாண்டவம் ஆடிய ஆலயம். இவ்வாலயத்தில் வைகாசி விசாகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு புனித கடங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு கொடி மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இரவு வெள்ளி படிசட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. சோடச தீபாரதனை செய்யப்பட்டு நடைபெற்ற திருவீதியுலாவில் ப்கதர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் முத்து பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதி உலா, கற்பக விருட்சம் காமதேனு வாகனங்கள், பூதம் பூதாகி வாகனங்கள் ரிஷப வாகனங்களில் ஓலை சப்பரத்தில் சகோபுர தரிசனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு வீதி உலா நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம் திருநாளில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாள் திருத்தேரோட்டம், 10ஆம் திருநாள் ஸ்ரீ நடராஜர் திருவீதியுலா தீத்தவாரி 13ம் திருநாள் தெப்ப திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS