BREAKING NEWS

வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக பிரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆற்காடு இடையிலான பாலாறு குறுக்கே அமைந்துள்ள பழைய மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நேற்று இரவு முதல் மும்முரமாக நடைபெற்று வருவதன் காரணமாக சென்னையில் இருந்து வேலூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதேபோல் வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக பிரிக்கப்பட்டு காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அனைத்தும் அணிவகுத்து ஆமை போல் ஊர்ந்து செல்வதால் காலை முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேம்பால பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதேபோல் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளூர் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்று வழி பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மட்டும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..

Share this…

CATEGORIES
TAGS