வேலூரில் லயன்ஸ் கிளப் ஆஃப் வேலூர் சாரல் வுமன் சங்கத்தின் 12-ஆம் ஆண்டு விழா!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபீசர்ஸ் லைன் பகுதியில் உள்ள ஹோட்டல் கண்ணா கூட்ட அரங்கில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் மாவட்டம் 3241 H, மண்டலம் 6, வட்டாரம் 19-ன் கீழ் செயல்பட்டு வரும் லயன்ஸ் கிளப் ஆஃப் வேலூர் சாரல் வுமன் சங்கத்தின் 12-ஆம் ஆண்டு சார்டர் டே கொண்டாட்ட விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலின் அறங்காவலரும் இயக்குநருமான டாக்டர் எம். சுரேஷ் பாபு மற்றும் சுபாஸ்ரீ வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மிருணாளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்புரையாற்றியதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
சங்கத்தின் தலைவர் லயன் தமிழ்இலக்கியா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலாளர் லயன் பிரமிளா ரவி, பொருளாளர் லயன் ஜெயந்தி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினர்.

விழாவில் சுமார் ரூ.6,000 மதிப்பிலான நலத்திட்ட உதவியாக செயல் இயந்திரம் வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இச்சங்கம், பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருவதுடன், இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காகப் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், பல்வேறு மக்கள் நலப் பணிகளைச் சேவைகளாகச் செய்து வரும்போது, நாங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த காலம் எங்களுக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையாகக் கருதப்படுகிறது. பொதுமக்களுக்குப் பொதுநலச் சேவைகளைச் செய்யும்போது பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், சமூக சேவை செய்து வரும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
