மானாமதுரையில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கிக் கூறும் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி கூட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மகாலில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் மாவட்ட கழக துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் திரு.சேங்கைமாறன் அவர்கள், மாவட்டஇளைஞர் அணி செயலாளர் திரு.செந்தில்நாதன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள் “திராவிட இயக்க வரலாறு” மிகச் சிறப்பாக உரையாற்றினர் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை சேர்ந்து இளைஞர் பெரும் திரளாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
