BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சாதிக்காக சோதிக்கிறாரா பெரியகருப்பன்?

சாதிக்காக சோதிக்கிறாரா பெரியகருப்பன்?

கடையடைப்பு நடத்தும் அளவுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தும் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்தை ஊருக்கு வெளியே கட்ட அவசரகதியில் பூமிபூஜை போடவைத்து விட்டாராம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். பூமிபூஜையில் தொகுதி எம்எல்ஏ-வான தமிழரசியும் கலந்து கொண்டதால் கொந்தளித்த இளையான்குடிவாசிகள், “இதுக்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம். அடுத்து எம்பி எலெக்‌ஷனுக்கு ஓட்டுக்கேட்டு வருவீங்கள்ல… அப்ப வெச்சுக்கிறோம்” என்று போன்போட்டு சீறினார்களாம்.

வர்த்தகர்கள் ஆலோசனைக் கூட்டம்...

பதறிப்போன தமிழரசி, “எனக்கு எதுவும் தெரியாது. பூமிபூஜை இருப்பதே முதல் நாள் இரவு பத்தரை மணிக்குத்தான் எனக்குச் சொன்னாங்க. இது விஷயமா தளபதி (முதல்வர்) என்னிடம் கேட்டால் அனைத்து விஷயத்தையும் அவரிடம் மறைக்காம சொல்லுவேன்” என்றாராம். பேருந்து நிலைய கட்டுமானத்தை எதிர்த்து அடுத்தகட்டப் போராட்டம் நடத்த வர்த்தகர்கள் தயாராகி வரும் நிலையில், “அமைச்சருக்கு வேண்டப்பட்ட அவங்க சாதிக்காரங்க பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் பண்றாங்க. அந்த பிளாட்டுகளோட மதிப்பைக் கூட்டுறதுக்காக பேருந்து நிலையத்தை அந்தப் பக்கமா தள்ளிட்டுப் போயிருக்காங்க” என்றும் சிலர் கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )