மாவட்ட செய்திகள்
செங்கம் விவசாய குறைதீர்வு கூட்டத்துக்கு காலணி மாலையணிந்து கோரிக்கை.

செங்கம் விவசாய குறைதீர்வு கூட்டத்துக்கு காலணி மாலையணிந்து கோரிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண் அலுவலகத்தில் இன்று மாதாந்திர முதல் செவ்வாய் அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி ராமஜெயம் என்பவர் காலணி மாலை அணிந்து கோரிக்கை வைத்ததால் பரபரப்பு நிலவியது.

மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பெயரளவில் மட்டும் குறைதீர்வு கூட்டத்தை நடத்துவதாகவும் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகளுக்கு எதிராக நடந்துகொள்கிறார்கள் என கோரிக்கை வைத்தார்.


பின்னர் விவசாயி கோரிக்கைகளை ஏற்று இனி விவசாயிகளுக்கான கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தபின் விவசாயி குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
