BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் புறநகர் கிழக்கு – மேற்கு, மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கழக ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவுப்படி திமுக அரசின் ஈவு இரக்கமற்ற சொத்துவரி உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் இன்று 05/04/2022 செவ்வாய்க்கிழமை திருப்பூர் குமரன் சிலை அருகில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு முனைவர் திரு பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்கள் தலைமையிலும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் (கி) மாவட்டக் கழகச் செயலாளருமான, C மகேந்திரன் M. A., MLA. அவர்கள், பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, M. S. M. ஆனந்தன் அவர்கள், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசாமி அவர்கள் திருப்பூர் (வ) சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளருமான K. N. விஜயகுமார் அவர்கள், திருப்பூர் (தெ) சட்டமன்ற (மு) உறுப்பினரும், மாநகர் மாவட்ட MGR இளைஞரணி செயலாளரும் குணசேகரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடு நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பெருந்தலைவர், ஒன்றிய பெருந்தலைவர்கள், துணை பெருந்தலைவர்கள், திருப்பூர் மாவட்ட கழகங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )