மாவட்ட செய்திகள்
திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம்: திமுக அரசு சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தியதைக் கண்டித்தும், மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அந்தவகையில் இன்று தேனி-மதுரை நெடுஞ்சாலையில் தேனி பங்களாமேடு பகுதியில் தேனி மாவட்ட அதிமுகவின் சார்பாக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசிற்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறாமல் சென்னையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
