மாவட்ட செய்திகள்
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் அமிர்தத்துளி நடைபயணம்.

திருவள்ளூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நீர் மேலாண்மை இயக்கம் இணைந்து அமிர்தத்துளி சுகாதார நடைப் பயணம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமிர்தத்துளி நடைபயணத்தை துவக்கி வைத்தார். இப்பயணத்தில் தண்ணீரை சேமிக்க வேண்டும், சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திமுக ஊராட்சி செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நடைபயணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் 6001 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
