BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மக்கள் மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி.

பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய 57 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா 07.04.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் 10 நாள்கள் இன்னிசை கச்சேரி நிகழ்வும் நடைபெறும். பாடியநல்லூர் ஊராட்சி மக்கள் மன்றம் சார்பில் 18 ஆண்டுகளாக இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டு வருகின்றது. முதல்நாள் நிகழ்வாக பாடியநல்லூர் ஊராட்சி மக்கள் மன்ற நிறுவனர்கள் கே.பார்த்திபன், கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.மாணிக்கம் வரவேற்புரையாற்றினார். சோழவரம் ஒன்றிய செயலாளர் பி.கார்மேகம் முன்னிலை வகித்தார்.

அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்னிசை கச்சேரி நிகழ்வை தொடங்கி வைத்தார். அதிமுக கட்சி நிர்வாகிகள் வி.கண்ணதாசன், வழக்கறிஞர் வி.தமிழரசன், பி.கே.செல்வம், ஆனந்த், வேலாயுதம், பாடியநல்லூர் ஊராட்சி துணைத்தலைவர் பிரியதர்ஷிணி சரவணன் வார்டு உறுப்பினர்கள் முத்துக்கண்ணன், என்.வேலு, ராணி மோகன், கே.ராஜவேல், துரை ரமேஷ், டி.சுதாகர், இளங்கோவன், விஜயகுமார், வடகரை நரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஸரிகமபதநி கிருஷ்ணன் குழுவினர் இன்னிசை கச்சேரியை சிறப்பாக நடத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )