மாவட்ட செய்திகள்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் முருகானந்தம் பேச்சு.


தஞ்சாவூரில் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பாஜக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாஜக தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார் அப்போது பேசிய அவர் தேர்தல் வாக்குறுதிகள் அத்தனைக்கும் விரோதமான ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது .



சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்கெட்டு உள்ளது என்று பேசினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து ‘வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும், மத்திய அரசு மீது குறை சொல்லாதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக கட்சியினர் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
