BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் போடியில் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்.

தேனி மாவட்டம் போடியில் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்.

தேனி மாவட்டம் போடியில் தற்சமயம் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் திமுகவினர் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் போடி நகர் பேருந்து நிலையம் அருகே திமுக-வினரால் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்கும் நிகழ்வை தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன்தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் மற்றும் பழச்சாறுகள் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி, திமுக நகர்மன்ற கவுன்சிலர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )