BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடியிருப்பு வீடுகளை அகற்ற முயன்றதால் அதிகாரிகள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணகுருக்கை பகுதியில் பல ஆண்டுகளாக சுமார் 17 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ளதாக அதனை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டதின் பெயரில் செங்கம் வட்ட ஆட்சியர் முனுசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இவர்களின் முன்னிலையில் குடியிருப்பு வீடுகளை அகற்ற முயலும்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கண்ணகுருக்கை பகுதியில் அரசுப் பள்ளி மற்றும் வருவாய் அலுவலகம் துணை சுகாதார நிலையம் என அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்களும் இப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ளதாகவும் அதனை அகற்றி விட்டு பின்னர் எங்கள் குடியிருப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதால் பாதுகாப்பிற்க்காக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )