மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மை முகாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மை முகாம் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் தகவல்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு தூய்மைப் பணி முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் இன்று (13/4/2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுவரும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தூய்மை பணி முகாம் மேற்கொள்ள அறிவுருத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு தூய்மை பணி முகாமினை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

22 மருத்துவர்களுடன் 202 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த அரசு மருத்துவமனையில் 26 தூய்மைப் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்படுவதற்குஏதுவாக அடிப்படை வசதிகளுக்கு தேவையான கட்டிடங்கள் விரைவில் அமைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., பேசினார் .
இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு. திலகம் , பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு. சுப்பையா, வருவாய் கோட்டாட்சியர் திரு பிரபாகர், வட்டாட்சியர் கணேஸ்வரன், பட்டுக்கோட்டை அரசு தலைமை மருத்துவர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
