சினிமா
ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம்.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான `பீஸ்ட்’ திரைப்படம் இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்களுக்காக காலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது காட்சி தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கம் முன்பாக மாவட்டத் தலைவர் குட்டி பேபி தலைமையில் கூடிய விஜய் மக்கள் இயக்கத்தினர் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் விஜய் இருப்பதைப் போன்று பொருத்தப்பட்டிருந்த பேனரின் கீழ் இனிப்பு வழங்கி கொண்டாடியவர்கள் அடுத்து செய்த காரியம் தான் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. வழக்கம்போல் தங்கள் தலைவனின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்த அந்த ரசிகர்கள், அதற்கு பதிலாக ஏழை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கி கொண்டாடினர். அவர்களின் இந்த செயல் அங்கிருந்த அனைவராலும் பாராட்டப் பெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட விஜய் ரசிகர்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தான். அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்தி வருகின்றனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரசவம், விபத்து மற்றும் மகப்பேறு முடிந்து தாய், சேய் இலவசமாக வீடுகளுக்கு திரும்ப செல்ல ஊரடங்கு நாட்களில் இலவசமாக 2 கார்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர். கரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கினர். வாழ்வாதாரத்தை இழந்து தவித்த ஏழை கூலி தொழிலாளர்களுக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகைகளை வழங்கினர். அந்த வகையில் தற்போது பால் பாக்கெட்டுகளை வழங்கி இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
