தலைப்பு செய்திகள்
கச்சத்தீவை மீட்பதே முதன்மை குறிக்கோள்!

தமிழக சட்டப்பேரவையில் கால்நடை, மீன்வளம், பால்வளம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட நான்கு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், ” கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது. இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்பட வேண்டும்” என்றும் அந்தக் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
